தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிக்குப் பாலியல் தொல்லை - கல்லூரி முதல்வர் மீது வழக்குப்பதிவு - பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம்

ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கல்லூரி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

YMCA College principal  sexual harassment  case registered against YMCA College principal  harassment  YMCA College  மாணவிக்கு பாலியல் தொல்லை  கல்லூரி முதல்வர் மீது வழக்கு  பாலியல் தொல்லை  கல்லூரி முதல்வர்  ஒய்எம்சிஏ  பாலியல்  பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம்  சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார்
கல்லூரி முதல்வர்

By

Published : Dec 2, 2022, 8:13 PM IST

சென்னை: நந்தனம் பகுதியில் அமைந்துள்ள ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் படித்து வரக்கூடிய மாணவி, நேற்று (டிசம்பர் 1) சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் தன்னிடம், கல்லூரியின் முதல்வரான ஜார்ஜ் ஆபிரகாம் என்பவர் வகுப்பில் தொடர்ச்சியாக ஆபாசமாகப் பேசி, பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 3 மாதங்களாகவே முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் செல்போனில் தொடர்பு கொண்டு தொடர்ந்து ஆபாசமாகப் பேசியும், குறுஞ்செய்தி அனுப்பியும் தொல்லை கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகார் தொடர்பாக கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கல்லூரி முதல்வரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'மண்ட மேல இருக்குற கொண்டைய மறந்துட்டோமே'.. டிவிஆரில் சிக்கிய கொள்ளையன்

ABOUT THE AUTHOR

...view details