தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ராணுவத்தேர்வில் ஆள்மாறாட்டம் - ஹரியானா மாநிலத்தைச்சேர்ந்த 29 பேர் மீது வழக்குப்பதிவு

ராணுவ அலுவலர்களால் நடத்தப்பட்ட குரூப் ‘சி’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ஹரியானா மாநிலத்தைச்சேர்ந்த 29 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராணுவ தேர்வில் ஆள்மாறாட்டம் - ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 29 பேர் மீது வழக்குப்பதிவு
ராணுவ தேர்வில் ஆள்மாறாட்டம் - ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 29 பேர் மீது வழக்குப்பதிவு

By

Published : Oct 10, 2022, 9:00 AM IST

சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ஆர்மி பப்ளிக் பள்ளியில், ராணுவ கன்டோன்மெண்ட் பணிகளுக்கான Defence Civilian Recruitment Group C என்ற தேர்வு நேற்று (அக் 9) காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வில் தமிழ்நாடு உள்பட வெளி மாநிலங்களைச்சேர்ந்த 1,728 நபர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

இந்த நிலையில் தேர்வெழுதிய ஹரியானா மாநிலத்தைச்சேர்ந்த சுமார் 29 நபர்கள், சிறிய அளவிலான ப்ளூடூத் டிவைஸை பயன்படுத்தி தேர்வு மையத்துக்கு வெளியே இருக்கும் நபர்களின் உதவியுடன் வினாக்களைப் பெற்று தேர்வுகளை எழுதியதாகப் புகார் எழுந்தது.

குறிப்பாக அம்மாநிலத்தைச்சேர்ந்த சஞ்சய் என்பவர், வினோத் சுக்ரா என்ற நபரை வைத்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ராணுவ அலுவலர்கள் அளித்தப்புகாரின் அடிப்படையில், ஹரியானா மாநிலத்தைச்சேர்ந்த 29 நபர்கள் மீது நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து தேர்வு எழுதிய நபர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் அனைவரும் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு காவல்துறையின் 'ஆப்ரேசன் மின்னல் ரவுடி வேட்டை' - 48 மணிநேரத்தில் 1310 ரவுடிகள் கைது

ABOUT THE AUTHOR

...view details