நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் விதிமுறைகளை மீறி ஏராளமானோர் கூட்டமாக கூடியதால், அதிமுக நிர்வாகி மகாலிங்கம், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி உள்பட 250 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு - Case registered against OPS and EPS
கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி உள்பட 250 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Case registered against OPS and EPS
கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ்ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முழு ஊரடங்கு தடையை மீறி அதிமுக தலைமையகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கரோனா தடுப்பு நடவடிக்கை: அரசுக்கு 150 கோடி வழங்கும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு