தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் நகைகளை உருக்க 6 மாதங்களுக்குத் தடை - நீதிமன்றம் உத்தரவு - கோயில் நகைகளை உருக்கத் தடை

தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக ஆறு வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசிற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் நகைகளை உருக்குவதற்குத் தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயில் நகைகளை உருக்குவதற்குத் தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

By

Published : Dec 15, 2021, 7:37 PM IST

Updated : Dec 16, 2021, 8:09 AM IST

சென்னை:தமிழ்நாட்டு கோயில்களில் உள்ள தங்கத்தை உருக்கி கட்டிகளாக மாற்றிவைப்பீடு வைப்பது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட வழக்குகள், பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோயில் நகைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்றுவருவதாகவும், அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், கோயில் நகைகள் கணக்கெடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடரலாம் என்றும் உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:வழக்கறிஞர் மீது தாக்குதல்: முன்னாள் எம்எல்ஏவை கைதுசெய்ய இடைக்காலத் தடை

Last Updated : Dec 16, 2021, 8:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details