சென்னை: அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷை, ஒரு பண்ணை வீட்டில் கட்டிவைத்து காவல் துறை அலுவலர்கள் சொத்துகளை எழுதி வாங்கியதாக கடந்த 2019ஆம் ஆண்டு புகார் எழுந்தது.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜேஷ் புகார் அளித்திருந்தார். ஆனால், 2020இல் தான் இவ்வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சிபிசிஐடிக்கு மாற்றம்
பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டார்.
கடந்த ஆறு மாதங்களாக தீவிரமாக விசாரணை நடத்திய சிபிசிஐடி காவல் துறையினர், தற்போது இந்த வழக்குத் தொடர்பாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தொழிலதிபர் ராஜேஷை கட்டி வைத்து சொத்தை எழுதி வாங்கிய புகாரில் சிக்கிய 6 காவல் துறை அலுவலர்கள் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பசு மீது கொதிக்கு எண்ணெய்யை ஊற்றிய கொடூரம்: காவல்துறை விசாரணை!