தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: சபாநாயகர் நாளை விசாரணை - Speaker danapal to begin hearing

சென்னை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த 11 சட்டப்பேரவை உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி நாளை (ஆகஸ்ட் 27) சபாநாயகர் தனபால் விசாரிக்கிறார்.

Case of disqualification of 11 MLAs: Speaker to begin hearing tomorrow
Case of disqualification of 11 MLAs: Speaker to begin hearing tomorrow

By

Published : Aug 26, 2020, 10:42 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தற்போதைய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

11 பேரையும் தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் கொறடாவுமான சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி, உள்ளிட்டோரும் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, 11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்யக்கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து, சக்கரபாணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதிநீக்க விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது எனவும் அந்த விவகாரத்தில் அவரே முடிவெடுப்பார் என்று நம்புவதாகவும் கூறி வழக்கை முடித்துவைத்தது.

அதன்படி, 11 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த வழக்குகளுக்கு பதிலளிக்க சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கோரினார். சபாநாயகர் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கை நான்கு வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் தகுதிநீக்கம் கோருவது தொடர்பாக, 11 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்த நிலையில் விசாரணையை நாளை (ஆக. 27) காலை 11 மணிக்கு காணொலி மூலமாக சபாநாயகர் தனபால் விசாரிக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details