தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரம்: அமைச்சர் பாண்டியராஜ் உள்ளிட்ட மூவரிடம் விசாரணை! - Speaker Dhanapal

சென்னை: 11எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்செய்யப்பட்ட வழக்கில், அமைச்சர் பாண்டியராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் நடராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பார்த்திபன் ஆகியோரிடம் பேரவைத் தலைவர் தனபால் காணொலி காட்சி வாயிலாக விசாரணை நடத்தினார்.

Dhanapal
Speaker

By

Published : Aug 28, 2020, 9:16 AM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுமீது 2017 பிப்ரவரி 18ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தற்போதைய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

அந்த 11 பேரையும் தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி வெற்றிவேல், ரங்கசாமி உள்ளிட்டோரும் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2018 ஏப்ரல் 7ஆம் தேதி, 11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்யக்கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து மீண்டும் திமுக எம்எல்ஏ சக்கரபாணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது எனவும், அந்த விவகாரத்தில் அவரே முடிவெடுப்பார் என்று நம்புவதாகவும் கூறி வழக்கை முடித்துவைத்தது. இந்தச் சூழலில், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் வழக்குகள் தொடர்பாக பதிலளிக்க சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கோரினார். இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம் வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், தகுதிநீக்கம் கோருவது தொடர்பாக, 11 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் விசாரணையை காணொலி காட்சி மூலமாக நடத்த சபாநாயகர் தனபால் முடிவுசெய்தார்.

இதனையடுத்து, தினகரனுக்கு ஆதரவளித்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பார்த்திபன், நடராஜன், அமைச்சர் பாண்டியராஜனிடம் பேரவைத் தலைவர் தனபால் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார்.

மேலும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் விரைவில் விசாரணை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பட்டியலின பெண் பஞ்சாயத்து தலைவரை இழிவுபடுத்தியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details