சென்னை: சின்னத்திரை நடிகை திவ்யா, தனது கணவரும் சின்னத்திரை நடிகருமான அரணவ், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார். கணவருக்கு வேறு ஒரு சின்னத்திரை நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதனால் தன்னை விட்டு சென்றதாகவும், தான் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திவ்யா கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை அரணவ் மறுத்தார். இதையடுத்து அரணவ் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர். அரணவ் அளித்த புகாரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் அரணவிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் திவ்யா விசாரணைக்கு ஆஜராகவில்லை.