தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஐடி மாணவி ஃபாத்திமா மரணத்திற்கு நீதி கேட்டவர்கள் மீது வழக்கு!

சென்னை: ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் மரணத்திற்குக் காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்திய, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

case filed upon dyfi cadres who protest for iit student fathima latheef's murder

By

Published : Nov 22, 2019, 10:48 AM IST

Updated : Nov 22, 2019, 11:06 AM IST

ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 'அது தற்கொலை அல்ல, அது ஒரு நிறுவனப்படுகொலை' என்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், மாணவி ஃபாத்திமா லத்தீப் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்து, முறையான நீதி வழங்கக் கோரியும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று சென்னையில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் சுரேஸ் குமார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் மீது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி, நுங்கம்பாக்கம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:''ராவணன் தமிழ்ச் சமூகத்தின் தலைவன்'' - திருமாவளவன்

Last Updated : Nov 22, 2019, 11:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details