சென்னை, எம்ஜிஆர் நகரில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில், விருகம்பாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.என்.ரவி, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து நேற்று முன்தினம் (மார்ச்.28) இரவு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
ஆனால், இரவு 10 மணியைக் கடந்தும்கூட தேர்தல் பரப்புரையில் அதிமுக வேட்பாளர் வி.என்.ரவி ஈடுபட்டதால், விருகம்பாக்கம் தொகுதி தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராஜ்மோகன் இது குறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அத்துடன் காணொலி ஆதாரங்களையும் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.