தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதையில் கார் ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ மீது வழக்குப்பதிவு

சென்னையில் ஓலா கார் ஓட்டுநரை குடிபோதையில் தாக்கிய உதவி ஆய்வாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போதையில் கார் ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ மீது வழக்குப்பதிவு
போதையில் கார் ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ மீது வழக்குப்பதிவு

By

Published : Jul 23, 2021, 12:01 PM IST

சென்னை:விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மயில்முருகன் (28). இவர் ஓலா (OLA) கார் ஓட்டி வருகிறார். நேற்று (ஜூலை 22) மாலை சவாரியை இறக்கிவிட்டு, எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகே காரை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்.

ஓட்டுநரை தாக்கிய உதவி ஆய்வாளர்

அப்போது அங்கு ரோந்து வாகனத்தில் வந்த உதவி ஆய்வாளர் ரகு (59), மயில்முருகனிடம் இங்கு காரில் நிற்கக்கூடாது, காரை எடுத்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் மயில்முருகனுக்கும், உதவி ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் திடீரென மயில்முருகனை உதவி ஆய்வாளர் தாக்கினார்.

இதில் காயமடைந்த மயில்முருகன் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், எழும்பூர் உதவி ஆய்வாளர் ரகு, குடிபோதையில் தன்னை தாக்கியதாக கூறி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து தகவலறிந்து எழும்பூர் காவல் நிலையம் வந்த கால்டாக்ஸி ஓட்டுநர்கள் உதவி ஆய்வாளர் ரகு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை

இதனையடுத்து உதவி ஆய்வாளர் ரகுவுக்கு அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. இதில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதியானது. இதனையடுத்து குடிபோதையில் ஓட்டுநரை தாக்கியதாக காயம் ஏற்படுத்துதல், முறையற்று தடுத்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் உதவி ஆய்வாளர் ரகு மீது எழும்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட ரகு மீது துறை ரீதியான விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மணல் கடத்தல்காரர்களிடம் மாமூல்: காவலர் பணியிடை நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details