இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்திருந்தார். தன்னுடைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் மனதைப் புண்படுத்துவது தனது நோக்கம் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கருணாநிதி செய்த பணிகளைத்தான் எடுத்துக் கூறியிருந்தேன் என்று தெரிவித்திருந்தார்.
'ஆர்.எஸ். பாரதி மீது புனையப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெறவேண்டும்' - வைகோ - வைகோ செய்திகள்
சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்ப பெறவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
mdmk-vaiko
அதைடுத்து கரோனா காலத்தில் தமிழ்நாடு சந்தித்த ஆயிரக்கணக்கான பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் அதிமுக அரசு, ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தை ஏவி கைது செய்திருக்கிறது. அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே ஆர்.எஸ்.பாரதி மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஆர்.எஸ். பாரதி கைது: கனிமொழி கடும் கண்டனம்!