திருச்சி: இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து இந்த சோதனையை நடத்தியது. ஜெர்மனியில் செயல்படும் நிறுவனம் மூலமாக ஆன்லைனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்தது தொடர்பாக ஜெர்மன் நாட்டில் இருந்து சர்வதேச காவல் துறையினர் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
திருச்சியில் குழந்தைகளின் ஆபாச படத்தை பகிர்ந்த நபர் மீது வழக்கு
சட்டவிரோதமாக குழந்தைகள் ஆபாச படத்தை வைத்திருத்தல், பகிர்தல் தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த நபர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
சாம் ஜான் (எ) ஆதித்ய கரிகாலன் தொடர்புடைய இடத்தில் நடத்திய சோதனையில் ஹார்டு டிஸ்க்கள், லேப்டாப்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பகிர்ர்தல், சேகரித்தல், பதிவிறக்கம் செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டது அம்பலமானது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 8ஆம் வகுப்பு மாணவர்கள்