தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவினர் ஏற்படுத்திய குழப்பம்: உணவுப் பாதுகாப்புத் துறையினர் மீது பாய்ந்த வழக்கு - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மீது அசோக் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

திமுகவினர் ஏற்படுத்திய குழப்பம்
திமுகவினர் ஏற்படுத்திய குழப்பம்

By

Published : Mar 23, 2021, 5:23 PM IST

சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாகக் கூறி, அங்கு சென்ற திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அந்த இடத்தில் இருந்த 10 பேரைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர்கள் அனைவருமே உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் எனத் தெரியவந்தது. அந்தப் பகுதியில் நடைபாதை வியாபாரிகள் உரிமம் பெறுவது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை அவர்கள் நடத்தியது விசாரணையில் அறியப்பட்டது. தீர விசாரிக்காமல் திமுகவினர் அதிரடியில் இறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

விழிப்புணர்வு ஏற்படுத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள், தேர்தல் அலுவலர்களிடம் அனுமதி வாங்காமல் கூட்டம் நடத்தியுள்ளனர். இதையறிந்த தியாகராய நகர் தேர்தல் பறக்கும் படை அலுவலர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பெயரில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சதாசிவம் உள்ளிட்ட அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுகவினர் ஏற்படுத்திய குழப்பம்

இந்திய தண்டனைச் சட்டம் 188 (சட்டவிரோதமாகக் கூடுதல்), 269 (தொற்றுநோய் தொடர்புடைய செயலில் ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திருப்பூரில் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details