தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி மாணவியை கர்ப்பமாகிய நபர் மீது புகார் - கல்லூரி மாணவியை கர்ப்பமாகிய நபர் மீது புகார்

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றியவர் மீது கல்லூரி மாணவி புகார்.

case filed against chennai youth who cheated college woman after making her pregnant
case filed against chennai youth who cheated college woman after making her pregnant

By

Published : Mar 20, 2020, 8:26 AM IST

சென்னை மயிலாப்பூர் நொச்சி நகரைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன் (25). தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்து வரும் இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜான்சி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்னும் கல்லூரி மாணவியை சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜான்சியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய ஜெயசந்திரன் அவரிடம் நெருங்கி பழகியதில் அவர் கர்ப்பமடைந்துள்ளாார். ஆனால் ஜான்சியை திருமணம் செய்துகொள்ள ஜெய்சந்திரன் மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜான்சி தன்னுடைய நிலையை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜான்சியின் பெற்றோர் ஜெயசந்திரன் வீட்டிற்குச் சென்று தங்கள் மகளுக்கு அவர்களின் மகனை திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் திருமணம் செய்து கொள்ள தொடர்ந்து ஜெயசந்திரனை ஜான்சி வற்புறுத்தியதால் கோபமடைந்த ஜெயசந்திரன் அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதனால் காயமடைந்த ஜான்சி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஜான்சி மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க... பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சகோதர உறவுமுறை கொண்ட இளைஞன்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details