தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடகுக் கடைக்காரரிடம் மாமூல் கேட்டு தாக்கிய அதிமுக பிரமுகர்: சிசிடிவி வெளியீடு - அதிமுக பிரமுகர்

சென்னை: ஐஸ் ஹவுஸ் பகுதியில் அடகுக் கடைக்காரரிடம் மாமூல் கேட்டு அதிமுக பிரமுகர் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அடகு கடை உரிமையாளரை தாக்கும் காட்சி
அடகு கடை உரிமையாளரை தாக்கும் காட்சி

By

Published : Sep 22, 2020, 8:35 PM IST

Updated : Sep 22, 2020, 11:04 PM IST

சென்னை ஐஸ் ஹவுஸ் லைட்ஸ் காலனியைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் மூர்த்தி. இவர், டாக்டர் பெசன்ட் சாலையில் அடகுக்கடை நடத்திவரும் சூத்ராராம் என்பவரிடம் மாமூல் பணமாக 500 ரூபாய் கேட்டுள்ளார்.

ஆனால், சூத்ராராம் 200 ரூபாய் மட்டும் தருவதாகக் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மூர்த்தி, சூத்ராராமை தாக்கிவிட்டுச் சென்றுள்ளார். இந்தக் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.

அடகுக்கடை உரிமையாளரைத் தாக்கும் காட்சி

இது தொடர்பாக சூத்ராராம், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, மூர்த்தியின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர். ஏற்கனவே மூர்த்தி மீது பல்வேறு இடங்களில் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காவலர்களை நடுவிரலைக் காட்டி மிரட்டிய விவகாரம்: அதிமுக பிரமுகரின் மகன் மீது வழக்கு

Last Updated : Sep 22, 2020, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details