வடபழனி ஆற்காடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஃபர். துணை நடிகையாக சினிமா, தொலைக்காட்சி, குறும்படங்களில் நடித்துவருகிறார். இவர் நேற்றிரவு வடபழனி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் எனக்கு அறிமுகமானார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் கடந்த வருடம் என்னை காதலிப்பதாக கூறியதால் அவருடன் நெருங்கி பழகி வந்தேன்.
ஆனால், சில நாட்களாக அவருடன் நெருக்கமாக இருந்த படுக்கையறை காட்சிகளை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிவருகிறார். ஏற்கனவே இதுகுறித்து புழல், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், பக்ருதீனை காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று என் வீட்டிற்கு வந்த பக்ருதீன் எனது தாயை கொலை செய்துவிடுவதாகக் கூறியுள்ளார். எனவே, பக்ருதீன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வடபழனி மகளிர் போலீசார் பக்ருதீன் மீது கொலை மிரட்டல், வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நித்தி ஆசிரமத்தில் பல அட்டூழியங்கள்- விவரங்கள் உள்ளே