சென்னை:அத்வானியை கொலை செய்ய முயன்ற வழக்கு, மதுரை மேம்பாலத்தின் அடியில் குண்டு வைத்த வழக்கு, ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு, புழல் ஜெயிலில் தான் இருந்த சிறையில் சிறைத் துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்வதாகக் கூறி சிறை ஊழியர்களை தாக்கிய வழக்கு என மொத்தம் 16 வழக்குகளில் தொடர்புடையவர், பயங்கரவாதி போலீஸ் பக்ருதீன்.
இதுபோன்று பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி போலீஸ் பக்ருதீனை கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்பொழுது போலீஸ் பக்ருதீனை புழல் சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் அடைத்துள்ளார். இந்நிலையில் நேற்று போலீஸ் பக்ருதீன் புழல் சிறையில் உள்ள பிசிபி (prison cash purchase) கேண்டீனில் பெப்பர் சிக்கன் மசாலா கேட்டுள்ளார்.
உடனே சிறைக்காவலர்களும் அவருக்கு சிக்கன் மசாலாவைக் கொடுத்தனர். அப்போது சிக்கன் மசாலா குறைந்த அளவில் உள்ளதாகவும், தனக்கு அதிகமான மசாலா தருமாறும் பக்ருதீன் சிறைக்காவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு சிறைக்காவலர்கள் எதுவாக இருந்தாலும் சிறை துணை ஜெயிலரிடம் கேட்குமாறு தெரிவித்துள்ளனர்.