தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கையா? - நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்குமா என்பது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கமளித்துள்ளார்.

Case failed on actor siddharth  actor siddharth  shankar jiwal talks about siddharth  case failed against siddharth  நடிகர் சித்தார்த்திற்கு சம்மன்  சங்கர் ஜிவால்  நடிகர் சித்தார்த்  நடிகர் சித்தார்த் மீது வழக்கு
நடிகர் சித்தார்த்திற்கு சம்மன்

By

Published : Jan 16, 2022, 7:11 AM IST

Updated : Jan 16, 2022, 4:40 PM IST

சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், ஜனவரி 12ஆம் தேதி காவல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் குடும்பத்தைச் சார்ந்த 115 பேருக்கு பணியாணைகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நடிகர் சித்தார்த், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண் தொகுப்பாளர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட விவகாரத்தில் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளேன். அதற்கேற்ப நடவடிக்கையில் ஈடுபட உள்ளேன்’’ எனக்கூறினார்.

இதையும் படிங்க: சென்னையில் கடை ஷட்டரை உடைத்து ரூ.4 லட்சம் திருடிய இருவர் கைது

Last Updated : Jan 16, 2022, 4:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details