தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வலிமையில் மெட்ரோ கதை, கதாபாத்திரங்கள்... போனி கபூர் விளக்கமளிக்க உத்தரவு... - வலிமை படத்தை ஓடிடி தளங்களில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும்

மெட்ரோ படத்தின் கதை, கதாபாத்திரங்கள் வலிமை படத்தில் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச். வினோத் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள் திருட்டு
வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள் திருட்டு

By

Published : Mar 12, 2022, 8:08 AM IST

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இந்தப் படத்தின் கதை, கதாபாத்திரங்கள், மெட்ரோ படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த படத்தைத் தயாரித்த ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வலிமை படத் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச். வினோத்

இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், "மெட்ரோ படத்தில் வசதியான வாழ்வுக்காக, தங்க சங்கிலி பறிப்பு, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியைக் கொல்வது போலக் காட்சிப் படுத்தப்பட்டது. இந்தப் படத்தை இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் தயாரிக்க உள்ள நிலையில், அதே கதை, கதாபாத்திரங்களுடன் வலிமை படம் படமாக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ படத்தின் கதை

இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது. எனவே வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும். அத்துடன் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தயாரிப்பாளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை நேற்று (மார்ச்.11) விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இதுகுறித்து வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குநர் வினோத் இருவரும் மார்ச் 17ஆம் தேதிக்குள் மனுவுக்குப் பதிலளிக்கும்படி உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இதையும் படிங்க: ''நாடு முழுவதும் என் மற்ற படங்களை மறந்து விட்டனர்'' - 'ஊ அந்தாவா மாமா..' வெற்றி குறித்து சமந்தா பேச்சு

ABOUT THE AUTHOR

...view details