சென்னை: 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பறக்கும்படையின் தலைவர் மாரிமுத்து தலைமையிலான குழுவினர் மார்ச் 12ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்போது, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு சென்ற வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர். இதனால் கடம்பூர் ராஜுவுடன் சென்றவர்களுக்கும், பறக்கும் படையிருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பணியில் இருந்த தன்னை மிரட்டியதாக மாரிமுத்து என்பவர் அளித்த புகாரில் தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரியும், காவல் துறை விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடம்பூர் ராஜு வழக்குத் தொடர்ந்திருந்தார். கடம்பூர் ராஜு மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது மனுவில், வாகனச் சோதனையின்போது வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கியதுடன், வாகனத்தை முழுமையாகச் சோதனை செய்ய ஒத்துழைத்ததாகவும், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டிடிவி தினகரன் vs கடம்பூர் ராஜு இதனிடையே, இன்று (பிப்ரவரி 21) இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், மனுதாரர் கடம்பூர் ராஜுவின் கோரிக்கையை ஏற்று அவருக்கு எதிரான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார். கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை எதிர்த்து கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட கடம்பூர் ராஜு 12 ஆயிரத்து 403 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிடிவி தினகரனை எதிர்த்து கடம்பூர் ராஜு வெற்றி இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு