தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து வழக்கு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், தேர்தல் ஆணையம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து வழக்கு
முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து வழக்கு

By

Published : Aug 13, 2021, 8:42 PM IST

சென்னை: நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை விட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

ஓ. பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைபாடுகள் உள்ளதாகவும், கடன் மதிப்பை குறைத்து காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு விசாரணை

இந்த வழக்கை மீண்டும் இன்று (ஆக.13) விசாரித்த நீதிபதி பாரதிதாசன், மனுவுக்கு செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த எம்.எல்.ரவி, நீதிமன்ற கட்டணம் செலுத்தாததால் தனது வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரினார்.

இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்ய மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி பாரதிதாசன், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:ஓபிஎஸ், உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

ABOUT THE AUTHOR

...view details