தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அளித்த புகாரை துணை நடிகை திரும்ப பெற்றுக் கொண்டதால், அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு ரத்து
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு ரத்து

By

Published : Jul 9, 2022, 7:51 PM IST

சென்னை:கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் அவருக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமீன் வழங்கியது. வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் மணிகன்டன் மீது தான் அளித்த புகாரை திரும்ப பெருவதாக நடிகை சாந்தினி சார்பில் தெரிவிக்கப்பட்டது .

இதையடுத்து, தன் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் புகார் அளித்தால் என்னவாகும் என்று துணை நடிகைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கொடநாடு விவகாரம்; சென்னையில் மும்முரமாக நடக்கும் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details