தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் இருவேறு இடங்களில்.. தீப்பிடித்து எரிந்த கார்கள்! - chennai car fire accident

Chennai car fire: சென்னையில் இருவேறு இடங்களில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Car fire accident
Car fire accident

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 4:40 PM IST

சென்னையில் இருவேறு இடங்களில்.. தீப்பிடித்து எரிந்த கார்கள்!

சென்னை: சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் அங்கேஷ். இவர் தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கண்ட அங்கேஷ் காரை நிறுத்திவிட்டு இறங்கியுள்ளார். அதன்பின் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மேலும், இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்து சபரீசன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய சகோதரர் கார்த்திக்கேயன் என்பவரை சென்னை விமான நிலைத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது, பரங்கிமலை சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் பழுதாகி நின்றுள்ளது. அதன்பின் முத்து சபரீசன் காரை ஸ்டார்ட் செய்ய முயன்றுள்ளார். ஆனால் காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனை அறிந்த சபரீசன் மற்றும் அவரது சகோதரரும் காரில் இருந்து இறங்கியுள்ளனர்.

சிறுது நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து ஏறிய தொடங்கியுள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் சிலர் தண்ணீரை ஊற்றி தீயை அனைத்துள்ளனர். இந்த தீ விபத்து தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தென் ஆப்பிரிக்கா பிளாட்டினம் சுரங்கத்தில் விபத்து - 11 பேர் பலி!

ABOUT THE AUTHOR

...view details