சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர், சங்கர். இவரும் இவரது மனைவியும் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலையில் வந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வரத் தொடங்கியுள்ளது.
சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு! - திடீரென தீப்பற்றிய கார்
சென்னை சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட சங்கர், காரை சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு, தனது மனைவியுடன் கீழே இறங்கி விட்டார். இதையடுத்து திடீரென கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் இது குறித்து தாம்பரம் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
பின், தாம்பரத்தில் இருந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். ஆனால், அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:Video: கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் கவிழ்ந்தது - நூலிழையில் உயிர்தப்பிய நால்வர்!