திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (39). இவர் சொந்தமாக கார் வைத்துக் கொண்டு வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.
இந்தநிலையில் இவர் கடந்த 15ஆம் தேதி அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிளசன் தாமஸ்(27), கிருபாகரன் ஆகியோர் தன்னிடம் உள்ள காரை வாடகைக்கு பெற்றுக் கொண்டு திருப்பி தராமல் இருந்ததாகவும், பின்னர் விசாரிக்கும் போது வேறொரு நபருக்கு காரை அடமானம் வைத்ததாகவும் கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.