சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் பின்புறம் உள்ள ராணுவ மைதானத்தில் வாகன நிறுத்துமிடம் உள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை.27) இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனைக் கண்ட பணியாளர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்தத் தகவலில் பேரில் விரைந்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.