தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரின் சாவியைக் காணவில்லை - செளந்தர்யா ரஜினிகாந்த் போலீஸில் புகார் - Range rover car key missing says soundarya rajini

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, தனது ஆடம்பர காரின் சாவியைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 10, 2023, 1:33 PM IST

சென்னை போயஸ்கார்டன் ராகவாவீரா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர்,சௌந்தர்யா ரஜினிகாந்த்(38). நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி சௌந்தர்யா வேலை சம்பந்தமாக, அவரது வீட்டிலிருந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வரை காரில் சென்றுள்ளார். பின்னர் அதே காரில் வைத்திருந்த, தனது மற்றொரு ரேஞ்ச் ரோவர் கார் சாவியைத் தேடியபோது காணாமல் போயுள்ளது தெரியவந்தது. பல இடங்களில் சௌந்தர்யா, கார் சாவியைத் தேடிய போதும் கிடைக்காததால் நேற்று(மே 9) அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கார் சாவியை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஜினிகாந்தின் முதல் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் காணாமல் போனதாகப் புகார் அளித்த நிலையில் தற்போது இரண்டாவது மகள் கார் சாவியைக் காணவில்லை எனப் புகார் கொடுத்திருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரேஞ்ச் ரோவர் கார் SE 3.0 Petrol விலை, சென்னை சந்தைமதிப்பில் ரூ.2 கோடியே 87 லட்சம் வரை விற்பனை ஆகிறது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details