சென்னை, அண்ணா சாலையில் சாலையோரம் நின்றிருந்த டாக்சி காரில் திடீரென புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த, கார் ஓட்டுநர் காரைவிட்டு இறங்கி ஓடியுள்ளார். பின்னர் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
நடுரோட்டில் கொளுந்துவிட்டு எரிந்த கார் - நல்வாய்ப்பாக தப்பித்த ஓட்டுநர்! - கொழுந்துவிட்டு எரியும் சாலையில் நின்றிருந்த கார்
சென்னை : அண்ணா சாலையில் சாலையோரம் நின்றிருந்த டாக்சி காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கார் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.
கார் கொழுந்துவிட்டு எரியும் காட்சி
பின்னர், அருகிலிருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தும், தீயணைப்பு வாகனம் வராததால் சுமார் 10 நிமிடம் வரை கார் கொளுந்துவிட்டு எரிந்தது.
தேனாம்பேட்டை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மேலும், கார் தீப்பிடிப்பதற்கான காரணம் குறித்து அண்ணா சாலை போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.