சென்னை அடுத்த செங்கல்பட்டைச் சேர்ந்த சீத்தாபதி என்பவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரைக் காண இண்டிகா காரில் தனது நண்பர்களுடன் இன்று சென்றுள்ளார். பின்னர், வீடு திரும்புவதற்காக மயிலாப்பூர் டிடிகே சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
சாலையில் சென்ற காரில் திடீர் தீவிபத்து! - திடீர் விபத்து
சென்னை: மைலாப்பூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
car
இதைக் கண்ட சீத்தாபதி தனது காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு இறங்கி தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலாப்பூர் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தார். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த தீவிபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த தீவிபத்து காரணமாக டிடிகே சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.