சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றிவருகிறார். இருசக்கர வாகனத்தில் வானகரம் சாலை வழியாக வந்துகொண்டிருந்த அவர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த கார், அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் ரஞ்சித் குமார் தூக்கி வீசப்பட்டு காரின் மேல் விழுந்தார். விபத்து ஏற்படுத்திய பதற்றத்தில் கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்சென்றார். ஆனால், காரின் மேல் ரஞ்சித் இருப்பது ஓட்டுநருக்கு தெரியவில்லை. அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல் துறையினர் காரை ஒரு கிலோ மீட்டர் துரத்திச் சென்று மடக்கிப்பிடித்தனர்.
இதையடுத்து கால் முறிவு ஏற்பட்ட நிலையில் காயமடைந்த ரஞ்சித் குமாரை மீட்ட காவல் துறையினர், சிகிச்சைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், கார் ஓட்டுநரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கணேச மூர்த்தி (25) என்பது தெரியவந்தது. மேலும், அவர் திருமழிசை காய்கறி சந்தையில் தக்காளி வியாபாரம் செய்து வருவதாகவும் இரவு சந்தைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
காரின் மேல் பயணம் செய்த இளைஞர் பின்னர், கணேச மூர்த்தியை கைதுசெய்த காவல் துறையினர், அவர் மீது விபத்து ஏற்படுத்தியது, தப்ப முயற்சி செய்தது போன்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விபத்து ஏற்பட்டபோது, சினிமா பட பாணியில் காரின் மேல் பயணம் செய்த சம்பவம் வாகன ஓட்டிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: விருதுநகர் கார்பன் தொழிற்சாலையில் தீ விபத்து