திருநெல்வேலி, தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 37 வளர்ப்பு யானைகள் உள்ளதாக தமிழ்நாடு வனத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த யானைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்ய 2016ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டது.
இதனையடுத்து இது குறித்து சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளமண்ட் ரூபின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், “அரசால் அமைக்கப்பட்ட குழுவால் வளர்ப்பு யானைகளின் உரிமையை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. அதனால் வளர்ப்பு யானைகளின் நிலையைக் கண்டறிய ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.