தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான் செயல் தலைவராவது குறித்து கேப்டன்தான் முடிவெடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் - draupadi murmu BJP

நான் தேமுதிகவின் செயல் தலைவராவது குறித்து கேப்டன்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

நான் செயல் தலைவர் ஆவது குறித்து கேப்டன் தான் முடிவெடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் சூளுரை!
நான் செயல் தலைவர் ஆவது குறித்து கேப்டன் தான் முடிவெடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் சூளுரை!

By

Published : Jul 2, 2022, 9:09 PM IST

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா கூறுகையில், "திரெளபதி முர்மு வெற்றி பெற வாழ்த்துகளை நேரடியாக சொல்ல இங்கு வந்துள்ளோன். பெண் வேட்பாளராக திரெளபதி முர்முவை தேர்ந்தெடுத்த பிரதமருக்கு ஒட்டுமொத்த பெண்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரெளபதி முர்மு வெற்றி பெறுவது உறுதி. கடவுள் முருகனின் மனைவி கூட பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அதுபோன்று இவர்களும் வெற்றி பெற்று அனைவருக்கும் நல்லதை செய்வார். ஒற்றைத்தலைமை என்பது அதிமுகவின் உட்கட்சி பூசல். இதை நாம் பேசுவது முறையாக இருக்காது. உங்கள் அனைவரையும் போல்தான் நானும் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.


இதை அதிமுகதான் முடிவு செய்ய வேண்டும். உண்மை தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ, அது தான் முடிவு. நான் செயல் தலைவராவது குறித்து கேப்டன்தான் முடிவு செய்ய வேண்டும். செயல் தலைவர் குறித்து உரிய நேரத்தில் கேப்டன் அறிவிப்பார். கேப்டன் உடல்நலம் நன்றாக இருக்கிறது. மாதம் ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வோம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தவறாக செய்தியை பரப்ப வேண்டாம்" என்றார்.

இதையும் படிங்க:'அரைவேக்காடு விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல அவசியம் இல்லை' - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details