தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தெய்வ பக்தி இல்லாதவர்களை கோயில் அறங்காவலர்களாக நியமிக்க முடியாது - உயர்நீதிமன்றம் - கோயில் அறங்காவலர்களாக நியமிக்க முடியாது

இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழுள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் விசாரணையில், தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது? என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 6, 2023, 8:43 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஜன.6) விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெறாதது குறித்து நீதிபதிகள், அறநிலையத்துறைக்கு கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர், கடந்த விசாரணையின்போது, தெய்வ பக்தி கொண்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்ததைச் சுட்டிக்காட்டி, அதன் காரணமாக அந்த கேள்வியை இடம்பெறச் செய்யவில்லை எனக் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என கண்டிப்புடன் தெரிவித்த நீதிபதிகள், அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வியை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், அறங்காவலர்கள் தேர்வுக்கான மாவட்ட அளவிலான குழு நியமனம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: என்ன கொடுமை சார் இது... கார்கில் போர் வீரருக்கு குடியுரிமையை நிரூபிக்கக்கோரி நோட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details