தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுமக்களுக்கு கஞ்சா சப்ளை செய்த இளைஞர் கைது! - கஞ்சா விற்ற இளைஞர் கைது

சென்னை: கே.கே. நகர் அரசு மருத்துவமனை அருகே பொதுமக்களுக்கு கஞ்சா சப்ளை செய்துவந்து இளைஞரை காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது
கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

By

Published : Oct 5, 2020, 3:03 PM IST

சென்னை எம்ஜிஆர் நகர், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துவருவதால் காவல் துறையினர், தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறிப்பாக நெசப்பாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு, ஒருவர் கஞ்சா சப்ளை செய்துவருவதாக நேற்று (அக். 04) காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, கஞ்சா வாங்குவதுபோல் ஒருவரை நடிக்கவைத்து நெசப்பாக்கம் டாக்டர் கானுநகர் அருகே கஞ்சா வியாபாரியை வரவழைத்துள்ளனர். பின்னர், கஞ்சா சப்ளை செய்யவந்த நபரை சுற்றிவளைத்த காவல் துறையினர், அவரைக் கைதுசெய்தனர்.

பின்னர், விசாரணையில் கஞ்சா வியாபாரம் செய்துவந்த நபர் நெசப்பாக்கம் கானுநகர் பகுதியைச் சேர்ந்த அஜய் (20) என்பதும், கே.கே. நகர் அரசு மருத்துவமனையில் புறநோயாளி சீட்டு எழுதும் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிவந்ததும் தெரியவந்தது.

மேலும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி (31) என்பவர் டயாலிசிஸ் சிகிச்சைக்காக கே.கே. நகர் அரசு மருத்துவமனைக்கு வரும்போது, அவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நாளடைவில் கஞ்சா வியாபாரம் செய்துவந்துள்ளனர்.

ராஜீவ் காந்தி சத்யா நகர் பகுதியிலிருந்து கஞ்சா வாங்கி, மருத்துவமனைக்கு வரும்போது அஜய்யிடம், ராஜிவ் காந்தி கொடுத்து, அதனை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகள், தனக்குத் தெரிந்த நண்பர்களுக்கு என அஜய் கஞ்சாவை வியாபாரம் செய்துவந்துள்ளார்.

இதையடுத்து, அஜய்யிடமிருந்து சுமார் 2 கிலோ 250 கிராம் கஞ்சா, 4 ஆயிரம் ரூபாய், செல்போன் போன்றவற்றைப் பறிமுதல்செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் ராஜீவ் காந்தியை எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: லாட்ஜில் தங்கி கஞ்சா, போதை மாத்திரைகளைப் பயன்படுத்திவந்த 3 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details