ஆவடியை அடுத்த பொத்தூர், கனரா வங்கி எதிரில் உள்ள காலி மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆய்வாளர் நடராஜன் தலைமையில் காவல்துறையினர் மாறுவேடத்தில் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது, அங்கு ஒரு இளைஞர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தார். அவரிடம், காவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பொட்டலத்தில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல்செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.