சென்னை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (பிப்ரவரி 19) நடைபெறவுள்ள நிலையில் கண்காணிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தச் சென்னையில் கூடுதலாக 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை வாகனங்களைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஜயராணி, மாநகராட்சி துணை ஆணையர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.
பறக்கும் படை வாகனங்களைத் தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளரைச் சந்தித்த மாவட்டத் தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி, "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதற்கு மேல் யாரும் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது. சென்னையில் 90 பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபடுவார்கள்.
தேர்தல் தொடர்பான விதிமீறல்களுக்கு இலவச தொலைபேசி எண் 1800 425 7012 அழைத்தால் பறக்கும் படை குழுக்களும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக 69 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.