சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக, நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள், முகவர்களுக்கு சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வேட்பாளர்கள் அடையாள அட்டையுடன் வர அனுமதி - Chennai vote counting booth rules
வாக்கு எண்ணும் மையங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள், முகவர்கள், அடையாள அட்டையுடன் வரலாம் என சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Vote
அதில், "வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள், முகவர்கள் ஆர்.ஓ. / டி.ஈ.ஓ.வால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளுடனே வர வேண்டும். எப்போதும் அந்த அடையாள அட்டையை அவர்கள் அணிந்திருக்க வேண்டும்.
அடையாள அட்டைகளைக் கொண்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், மற்றவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் இது வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் பொருந்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.