சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மருத்துவமனை நிர்வாக மருத்துவர், "கேன்சர் என்பது தமிழகத்தில் அதிகளவில் வளர்ந்து விட்டது. தேசிய அளவில் சிறுநீரகப் புற்று நோயில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. எளிய அறுவை சிகிச்சை மூலம் இந்த கேன்சரைச் சரி முடியும். இதைப் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்" என்றார்.
சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் - புற்றுநோய்
சென்னை: பெசன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறிகளாக சிறுநீரகத்தில் ரத்தம் வடிதல், உடல் வெப்பம் அதிகரித்தல் போன்றவை இருக்கும். இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவர்களிடம் உடனடியாக ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு கேன்சரை கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.