தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவப்படிப்பிற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து! - A consultation was held for allotment of seats

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும்; அதைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து!!
மருத்துவ படிப்பிற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து!!

By

Published : Nov 9, 2022, 3:06 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு பெற்றது. அதனைத்தாெடர்ந்து மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து அக்டோபர் 19,20 ஆகிய தேதிகளில் சிறப்புப்பிரிவு மாணவர்கள் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதில் 565 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன.

அதனைத்தொடர்ந்து அக்டோபர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் அரசு, தனியார் மருத்துவக்கல்லூரி, தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படது. அவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் 31ஆம் தேதி வழங்கப்பட்டன. மாணவர்கள் 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான முதல் சுற்றுக்கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கு 7,036 மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 6,078 மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 1,209 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 639 பேர் ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டில் 163 பேரில் 94 பேர் ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். 8,408 பேரில் 6,803 பேர் கல்லூரியில் சேர உள்ளனர்.

தனியார் மருத்துவக்கல்லூரியில் மாணவர்களிடம் அதிகளவில் கட்டணம் வசூல் செய்வதை தடுப்பதற்காக முதல்முறையாக கல்விக்கட்டணங்களை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு பெற்று வருகிறது.
மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் முழுவதும் ஆன்லைன் மூலம் கட்டப்பட வேண்டும். விடுதிக்கட்டணம், பேருந்து கட்டணம் மற்றும் கல்லூரி வளர்ச்சி நிதியாக ரூ.40 ஆயிரம் மட்டுமே தனியார் மருத்துவக்கல்லூரியில் கூடுதலாக வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணயக்குழு முதுகலை, இளநிலை மருத்துவப்படிப்பிற்கான கல்விக்கட்டணங்களை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. அதனைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் அது குறித்த புகார்களை Under Graduate E- Mail – ddugselcom@gmail.com. Post Graduate E-Mail Id – ddpgselcom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

தனியார் மருத்துவக்கல்லூரிக்கான கட்டண விவரங்கள் https://tnmedicalselection.net/news/05112022060421.pdf என்ற இணையதள முகவரியிலும் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவக்கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு 20-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார் கலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தனியார் கல்விக் கட்டண நிர்ணயக் குழு ஆகியவற்றிற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில் குமார், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அதைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாகப் புகார் வந்தால் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்காக அங்கீகாரம் வழங்கும் நிறுவனத்திற்குப் பரிந்துரை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க:உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பு

ABOUT THE AUTHOR

...view details