தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிற்கல்வி பட்டப்படிப்புக்களின் இறுதி பருவத் தேர்வை ரத்து செய்யக்கோரி மனு - கரோனா தொற்று பரவல்

சென்னை: பொறியியல் உள்ளிட்ட அனைத்து தொழிற்கல்வி பட்டப்படிப்புக்களின் இறுதி பருவத் தேர்வை (Semesters) ரத்து செய்ய பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Cancel the all engeering final year semester exams, petition filed in chennai hc
Cancel the all engeering final year semester exams, petition filed in chennai hc

By

Published : Jul 3, 2020, 10:43 PM IST

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இதேபோல, தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் உள்ளிட்ட அனைத்து தொழிற்கல்வி பட்ட படிப்புக்களுக்கான இறுதிப்பருவத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், "பள்ளி, கல்லூரிகள், மாணவர் விடுதிகள் கரோனா தனிமைப்படுத்தல் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளதால், இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. தற்போதைய சூழலில் கரோனா பாதிப்பு செப்டம்பர் மாதம்தான் தணியும். பள்ளி, கல்லூரிகள் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் திறக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், ஜனவரியில் தேர்வு எழுதினால் அதன் முடிவுகள் வெளியாக மார்ச் மாதமாகிவிடும் என்பதால், தேர்வெழுதும் மாணவர்கள் இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்வு நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதாலும் தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்பதாலும், இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்து, ஹால் டிக்கெட் பெற்ற அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். பொறியியல் உள்ளிட்ட அனைத்து தொழிற்கல்வி பட்டப்படிப்புக்களின் இறுதி பருவத் தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details