தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனடா நாடாளுமன்றத் தீர்மானம் - வைகோ வரவேற்பு

கனடா நாடாளுமன்றத்தில் இலங்கையில் ஈழத் தமிழர் இன அழிப்புக்கு ஐநா நீதி விசாரணை செய்ய வேண்டுமென தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு அளித்துள்ளார்.

VAIKO

By

Published : Jun 22, 2019, 7:09 PM IST

இது குறித்து வைகோ தெரிவித்ததாவது:

இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தாக்குதல், 2009ஆம் ஆண்டில் இறுதிக் கட்டப் போர் குறித்தும் விசாரணை செய்வதற்கு, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை அமைப்பு ஒன்றை அமைக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபைக்குக்கனடா நாடாளுமன்றம்கோரிக்கை விடுத்திருக்கின்றது. இதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.

அந்தத் தீர்மானத்தில், வன்முறையாலும், போராலும் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களுக்கு இரங்கலைத் தெரிவித்திருப்பதுடன், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்குமாறும் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டது. மேலும், ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 30/1, 40/1 ஆகிய தீர்மானங்களின்படி, தெளிவான கால அட்டவணை வகுத்துச் செயல்படுமாறு கனடா அரசு இலங்கையிடம் முன்பு விடுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றது.

இந்நிலையில், கனடா நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கின்ற இந்தத் தீர்மானம், ஈழத்தமிழர் படுகொலைக்கு உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது எனவும்,கனடா அரசுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தப் பிரச்னையில் உரிய நீதி கிடைப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு வைகோ கேட்டுக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details