சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் அம்ரிதா(34). சேத்துப்பட்டு முக்தா கார்டன் பகுதியில் 'மம்மி ஷார்ட் ஸ்டுடியோ' எனும் ஃபோட்டோ ஷூட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் ஏராளமான விலை உயர்ந்த கேமரா மற்றும் வீடியோ கேமராக்கள் உள்ளன. இவர் கடந்த 10ஆம் தேதி சொந்த வேலையின் காரணமாக பெங்களூரு சென்றுவிட்டு நேற்று(13-03-2020) காலை சென்னை திரும்பியுள்ளார்.
போட்டோ ஷூட் நிறுவனத்தில் கேமராக்கள் திருட்டு - கேமரா திருட்டு
சென்னை: போட்டோ ஷூட் நிறுவனத்தில் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமராக்கள் மற்றும் கேமரா லென்சுகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் இவர் தனது நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது விலை உயர்ந்த இரண்டு கேமராக்கள் மற்றும் ஆறு விலை உயர்ந்த கேமரா லென்சுகளும் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டபோது யாரும் தங்களுக்கு தெரியாது என பதில் அளித்துள்ளனர். நிறுவனத்தின் கதவுகள் மற்றும் அறைகளின் எந்த பொருட்களும் உடைக்கப்படவில்லை.
சுமார் 6 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட கேமரா மற்றும் கேமரா லென்ஸ்கள் திருடு போயிருப்பது குறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அம்ரிதா உடன் சேர்த்து அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என மொத்தம் 5 பேரிடம் நிறுவனத்தின் சாவிகள் உள்ளன. இதனால் நிறுவன ஊழியர்கள் யாரேனும் கேமரா மற்றும் கேமரா லென்சுகளை திருடியிருப்பார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.