தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்போன் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு - மின் கட்டணம் கணக்கீட செயலி

நுகர்வோரே மின் கட்டணத்தைக் கணக்கிடும் வகையிலான செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

calculation-of-electricity-charges-by-cell-phone-app
calculation-of-electricity-charges-by-cell-phone-app

By

Published : Feb 1, 2022, 11:52 AM IST

சென்னை: டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்குச் சேவைகளை வழங்கும் முயற்சியை தமிழ்நாடு மின் வாரியம் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக நுகர்வோரே மின் கட்டணத்தைக் கணக்கிடும் வகையிலான செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து மின் கட்டணத்தைக் கணக்கீடு செய்யலாம் எனவும், இந்தச் செயலியில் மீட்டர் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்த ஒரு சில நிமிடங்களில் மின் கட்டண ரசீது ஒரு சில நிமிடங்களில் குறுஞ்செய்தி வாயிலாக நுகர்வோருக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியாக மின்வாரிய ஊழியர்களுக்கு இந்தச் செயலி வழங்கப்பட்டு, பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் கணக்கிடும் பணிகளைத் தொடங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் செயலியின் சாதக, பாதகங்களை நுகர்வோரின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பப்ஜியால் நேர்ந்த விபரீதம்: இளைஞரின் கையை வெட்டிய முதியவர்

ABOUT THE AUTHOR

...view details