சென்னை: போரூர் அடுத்த மதனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம் கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார். இவர் நேற்று மகன் தானேஸ்வரனுடன் மதனந்தபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் பொன்னுரங்கத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இதில் அவரது மகன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து மாங்காடு காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்ததில், பூவிருந்தவல்லியை சேர்ந்த ஒன்பது பேரை கைது செய்தனர். விசாரணையில் யாசிமும், பொண்ணுரங்கத்தின் தங்கையும் ஒரே இடத்தை வாங்கியதும், இதில் இருவருமே நிலம் தங்களுக்கு சொந்தம் என கூறி வந்ததும் தெரியவந்தது.