சென்னை பசுமை வழிச்சாலை உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்திற்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வருகை தந்திருந்தார். அங்கு அவர் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார். அப்போது அவரை, முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
முதலமைச்சரை சந்தித்த மத்திய அமைச்சர்! - மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்
சென்னை: மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.

TN Chief Minister
இந்நிகழ்வின்போது மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.