சென்னை: தலைமைச் செயலகத்தில் மே 2 ஆம் தேதி மாலை 5 மணியளவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கடந்த மாதம் மார்ச் 20 ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் அதைத் தொடர்ந்து மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் முடிவடைந்த நிலையில் பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதை செயல்படுத்தும் முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு, இத்திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.