சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர். திமுக அரசு பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அமைச்சரவையில் புதிய அமைச்சருக்கு இடம் அளிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்து விவாதிக்கப்பட்டது. புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டசபை கூட்டத் தொடர் 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவெள்ளை நிலையில் அரசின் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், 8776 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில், 15610.43 கோடி ரூபாய் அளவுக்கு புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.