தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரும் ஜனவரி 4-ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் - தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு, அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்ட மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜனவரி 4ஆம் தேதி கூட உள்ளது.

ஜனவரி 4-ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
ஜனவரி 4-ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

By

Published : Dec 20, 2022, 6:34 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் ஜனவரி 4-ஆம் தேதி காலை 11 மணி அளவில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக கடந்த 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். மேலும் பல அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்து அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின. இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட உள்ளது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த முறை சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை என்னவாக உள்ளது, இலாக்காக்கள் மாற்றம் தொடர்பாகவும், நிலுவையில் உள்ள மசோதாக்கள், ஆளுநரிடம் நிலுவையில் உள்ள சட்டப்பேரவை சட்டத் தீர்மானங்கள் மற்றும் வரக்கூடிய 2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் பொங்கல் விழாவிற்கு முன்னதாக வைக்கலாமா அல்லது பிறகு வைக்கலாமா அதில் என்னென்ன அறிவிப்புகள் புதிய அறிவிப்புகள் வெளியிடலாம் என்பது குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details