சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், தமிழ்நாட்டின் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் பொதுப் போக்குவரத்து வாகனமான ஆட்டோ, கேப் உரிமையாளர்களுக்கு வழங்கிய கடன்களின் தவணைகளை மார்ச் 2021 வரை கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறைந்த காலத்தில் பிடிக்கப்பட்ட வட்டிக்கு வட்டி நிலையும், இஎம்ஐ.,களுக்கான செக் பவுன்ஸ் கட்டணங்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆட்டோகளுக்கு மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்ட வரிகள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். அதேபோல் அனைத்து ஆர்டிஓ அலுவலங்களிலும் தரகர்களை அனுமதிக்கவேக் கூடாது. மானிய விலையில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.